வாங்க வேண்டிய பொருட்கள்

கோவிலுக்கு போகும்போது என்ன பொருள்கள் வாங்கி செல்ல வேண்டும்


விவரங்கள்

மூலஸ்தானத்தில் உடைப்பதற்கு குறைந்தது மூன்று தேங்காய், பன்னிரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வாங்க வேண்டும். கீழ் வீட்டில் அருளாட்சி செய்யும் காத்தவராய சுவாமிக்கு உகந்த சிறப்பு எனும் வெற்றிலை கட்டு, பாக்கு, புகையிலை புனுகு, சவ்வாது போன்ற வாசனை திரவியங்கள் படைக்கவேண்டும். பதினெட்டாம்படி பார்த்திபன் பெரிய கருப்பசாமிக்கு உரிய ஒண்ணே கால் பணம் செலுத்தவேண்டும். கடையில்

ஒண்ணே கால் பணம் என்று சொன்னால் வேண்டியது கொடுப்பார்கள். சிறப்பு வாங்கி வைத்தால் கீழ் வீட்டிலும் ஒண்ணே கால் பணம் வைத்தல் பதினெட்டாம்படி இருப்பிடத்திலும் பூசாரி அய்யா நமக்கு அருள்வாக்கு சொல்வார்கள்.

பிள்ளையார் பொங்கல்

நம் கோவிலில் நாம் பிள்ளையார் பொங்கல் எப்போதெல்லாம் பொங்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை பிள்ளையார் பொங்கல் பொங்கலாம். குழந்தைச் செல்வம் கிடைத்த ஆண்டு; நம் பெண் மக்கள். ஆண் மக்களுக்கு திருமணம் ஆன ஆண்டு. வீடு, மனை வாங்கிய ஆண்டு பிள்ளையார் பொங்கல் பொங்க வேண்டும். பிள்ளையார் பொங்கல் மாசித்திருவிழாவின் போது பொங்கினால், மூன்று தேங்காய், எண்ணெய் 1 லிட்டர், கற்பூரம், ஊதுபத்தி, பன்னிரண்டு வாழைபழம், மூன்று மாலை வாங்கினால் போதும். மற்ற ம
ாதங்களில் வெள்ளிகிழமை பொங்க வேண்டும். அப்போது நெல் 5 படி, தேங்காய் 35, வாழைபழம் 105, மாலை சிறியது 20, பெரியது 5, சாம்பிராணி, கற்பூரம், ஊதுபத்தி, பருத்திமார், கட்டு வாங்கிச் செல்லவேண்டும்.

ஐம்பத்து ஒன்று தெய்வங்கள்

நமது கோவிலில் ஐம்பத்து ஒன்று தெய்வங்களுக்கு நாம் நமது குடும்ப சார்பாக பொங்கலிட்டு வழிபாடு செய்ய என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


மாசித்திருவிழா தவிர தமிழ் மாத கடைசி வெள்ளிகிழமை அன்று ஐம்பத்து ஒன்று தெய்வங்களுக்கும் படையல் இடலாம். வழிபாடு செய்யும் நாளன்று காலையில் நம் பெண்கள் கோவிலுக்கு சென்று நெல்லை குத்தி அரிசியாக்க வேண்டும். அன்று மாலை ஆறு மணிக்கு நாம் நம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பூசாரி அய்யாவிடம் திருநீறு பெற்று பிள்ளையாருக்கு ஒரு வெண்பொங்கலும், ஐம்பத்து ஒன்று தெய்வங்களுக்கு ஒரு சர்க்கரை பொங்கலும் பொங்க வேண்டும்.

பொங்கல் தாமதமின்றி விரைவாக பொங்க இருபத்து ஒன்று நாட்களுக்கு முன்பிருந்தே நாம் உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இருக்க வேண்டும். இருபத்து ஒன்று நாட்களும் நாம் வாழும் வீட்டில் சுத்தம் கடைபிடிக்கப்பட வேண்டும். அந்த இருப்பத்து ஒன்று நாட்களும் அடுத்த வீடுகளில் உணவு உண்ணக்கூடாது. நாம் பொங்கல் பொங்கும் செய்தியை நமது அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டும். நாம் பொங்கலிடும் நாளை ஒரு மாத காலத்திற்கு முன்பே பூசாரி அய்யா அவர்களுக்கு தகவல் சொல்லி பொங்கல் பொங்கும் நாளை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஐம்பத்து ஒன்று பீட பூஜைக்கு வாங்க வேண்டிய பொருட்கள் நெல் 10 படி, வெள்ளம் 4 கிலோ (அச்சு வெல்லம்), மாலை சிறியது 60, பெரிய மாலை 5, தேங்காய் 60, வாழைப்பழம் 250, எலுமிச்சம்பழம் 2 கிலோ, 5 ருபாய் நாணயம் 55, கற்பூரம் 500 கிராம், சாம்பிராணி 250 கிராம், இலைக்கட்டு 10, ஊதுப்பதி பாக்கெட் 10, உள்ளூர் கடையில் கேட்டு வாங்க வேண்டியது, கீழ்வீட்டுக்கு சிறப்பு, பதினெட்டம்படிக்கு ஒண்ணே கால் பணம், எண்ணெய் 5 கிலோ, பஞ்சாமிர்தத்துக்கு வேண்டிய பழவகைகள் மற்றும் பொருட்கள் வாங்க வேண்டும் மற்றும் பருத்திமார் கட்டு 6.